உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலையில் காயங்களுடன் செங்கை நபர் உயிரிழப்பு

தலையில் காயங்களுடன் செங்கை நபர் உயிரிழப்பு

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலை, மருத்துவன்பாடி கூட்டுச்சாலை அருகே, தலையில் காயத்துடன் ஆண் சடலம் கிடந்தது.உத்திரமேரூர் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.இதில், இறந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம், மேலமையூரைச் சேர்ந்த ரமேஷ், 47, என்பது தெரியவந்தது. இவர், தாம்பரம் ரயில்வேயில் தற்காலிக ஊழியராக பணியாற்றியதும், ஆறு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததும் தெரிந்தது.தலையில் காயம் இருப்பதால், விபத்தில் சிக்கி இறந்தாரா அல்லது யாராவது தாக்கி இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த முதுகரை பகுதி கால்வாயில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்களின் தகவலை அடுத்து வந்த சித்தாமூர் போலீசார், சடலத்தை மீட்டனர். இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை