உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபயிற்சி மேற்கொண்ட முதியவரை கடித்த பாம்பு

நடைபயிற்சி மேற்கொண்ட முதியவரை கடித்த பாம்பு

செம்பாக்கம்: கோவில் குள வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதியவரை பாம்பு கடித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் ஆளவட்டம்மன் கோவில் குளத்தில், காலை மற்றும் மாலை வேளையில் நுாற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த குளம், புதர்மண்டி உள்ளதால், பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், நடைபயிற்சி செய்பவர்கள் பயத்துடனே செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்ட, ஸ்டெல்லஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, 64, என்பவரை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம், நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து, குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை