உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளி வேன் மீது மோதிய கார்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்

பள்ளி வேன் மீது மோதிய கார்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்

கோட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், சக்தி கார்டன் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பழனியப்பன், 66; ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர், நேற்று மதியம் தலைமை செயலகம் எதிரில், ராஜாஜி சாலையில் நிசான் காரில் சென்றார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள பிளாஸ்டிக் தடுப்புகளை உடைத்து கொண்டு, எதிரில் சாந்தோம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பிராட்வே, ஆசிர்வாதபுரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின், 'மாருதி இகோ' வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில், வேனின் முன் பக்கம் நொறுங்கியது.அதேநேரம், பின்னால் வந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஜுனீக் பாஷா என்பவரின் ேஹாண்டா காரும், வேன் மீது மோதியது. இதில், வேனின் பின்புறமும் சேதமடைந்தது. காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதோடு, முன்சக்கரம் தனியாக கழன்றது.இந்த விபத்தில், மாருதி இகோ வேனில் வந்த 4ம் வகுப்பு மாணவர் கவுதம், 10, உட்பட ஏழு மாணவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில், சிறு காயமடைந்த கவுதம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற ஆறு மாணவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, வீடு திரும்பினர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்தில் சிக்கிய வாகனங்களை, அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து, பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை