போன் டவரில் ஏறி போதை ஆசாமி ரகளை
திருவேற்காடு:திருவேற்காடு, அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வில்சன், 35; டிரைவர். இவர், திருவேற்காடு, பெருமாள் அகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, துக்க நிகழ்ச்சிக்கு நேற்று மனைவியுடன் சென்றார்.அங்கு மதுபோதையில் வில்சன் ரகளையில் ஈடுபட்டதால், உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர். ஆத்திரமடைந்த வில்சன், வீட்டின் மீது அமைக்கப்பட்டு இருந்த 'மொபைல் போன்' கோபுரம் மீது ஏறி நின்று, உறவினர்களை கைது செய்ய கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த திருவேற்காடு போலீசார், ஆவடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உறவினர்கள் பேச்சு நடத்தியும் அவர் கீழே இறங்கவில்லை. இதையடுத்து, போலீசார் வில்சனை அடித்த உறவினரை வேனில் ஏற்றி சென்றனர். அதன்பின், அவர் கீழே இறங்கி வந்தார்.