நீர்யானை குட்டியை ரசித்த அமைச்சர்
தாம்பரம், வண்டலுார் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர், சமீபத்தில் பிறந்த நீர்யானை குட்டியை பார்வையிட்டார்.வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வண்டலுார் உயிரியில் பூங்காவில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை, நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பூங்கா இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'பிரகுர்த்தி' என்ற பெண் நீர்யானை, சமீபத்தில் ஈன்ற குட்டியை அமைச்சர் பார்வையிட்டார்.