உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2,100 பேருக்கு வீட்டுமனை பட்டா வடசென்னை மக்கள் மகிழ்ச்சி

2,100 பேருக்கு வீட்டுமனை பட்டா வடசென்னை மக்கள் மகிழ்ச்சி

திருவொற்றியூர்,:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், திருவொற்றியூர், மாதவரம், பொன்னேரியைச் சேர்ந்த மக்களுக்கு, வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி, திருவொற்றியூரில் நேற்று நடந்தது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, 2,100 பயனாளிகளுக்கு பட்டா வழங்கி கூறியதாவது:ஏழை, எளிய மக்களின் ஏற்றத்திற்காக, பல்வேறு நலத்திட்ட உதவிகளை, தி.மு.க., அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.வீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான தேவை. வீடு எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு வீட்டிற்கான பட்டாவும் முக்கியம். பட்டா வாங்க வேண்டுமென என்ற பல ஆண்டு மக்களின் கனவு, இன்று நினைவாகி உள்ளது. இதுவரை, 28,848 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் மட்டும், 7,000 பட்டா வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 2000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.சென்னையின் மற்ற தொகுதியில், அந்தெந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், பொதுமக்களுக்கு விரைவில் பட்டாக்களை வழங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்கள் ராமசந்திரன், சேகர்பாபு, அரசு துறை முதன்மை செயலர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !