உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 15 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கழிவுநீர் நிலையம் இடமாற்றம்

15 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கழிவுநீர் நிலையம் இடமாற்றம்

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரி விரைவு சாலையில், 1990ம் ஆண்டு அமைத்த கழிவுநீர் வெளியேற்று நிலையம் உள்ளது.இந்த சாலையை, 200 அடியாக விரிவாக்கம் செய்ததால், நிலையம் சாலைக்கு இடையூறாக மாறியது.இதனால், வாகன நெரிசல், விபத்து அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையத்தை இடம் மாற்றி அமைக்க, வேளச்சேரியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். போதுமான இடம் கிடைக்காததால், இடம் மாற்றி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.இந்நிலையில், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில், 3,500 சதுர அடி பரப்பில், இந்த நிலையம் இடம் மாறுகிறது. மாநகராட்சி வழங்கும் இடத்திற்கு ஈடாக மாற்று இடம் வழங்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இடம் கைமாறியதும், மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.பருவமழை முடிந்த பின், இதற்கான பணி துவங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதன்வாயிலாக, 15 ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக, பகுதிமக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !