உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யூ - 25 கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி சாம்பியன்

யூ - 25 கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி சாம்பியன்

சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான, யூ - 25 கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்தன. போட்டியில் சென்னை, திருவள்ளூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம், செங்குன்றத்தில் உள்ள ஸ்டாக் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், திருப்பூர் - திருவள்ளூர் மாவட்ட அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 49 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 169 ரன்களை எடுத்தது. அணியின் வீரர் நவீன், 92 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய, திருவள்ளூர் அணியில், முதலில் பேட்டிங் செய்த, அகாஷ் மற்றும் ஷ்ரெனிக் ஜோடி, சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடிந்தனர். திருவள்ளூர் அணி, 32.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பின்றி, 170 ரன்களை எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. அணியின் வீரர் ஆகாஷ், 104 பந்துகளில் 17 பவுண்டரியுடன், 105 ரன்களை எடுத்தார்; ஷ்ரெனிக் 56 ரன்களும் எடுத்து வெற்றிக்கு கை கொடுத்தார்.ஒட்டுமொத்த போட்டியின் சிறந்த வீரர்களாக எட்டு போட்டிகளில், ஐந்து அரை சதங்களுடன், 399 ரன்களை எடுத்த திருப்பூர் வீரர் நவீன்; ஏழு போட்டிகளில், 17 விக்கெட்களை எடுத்த, திண்டுக்கல் வீரர் ஜெயந்த் ஆகியோர் தேர்வாகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை