ஆலந்துார் மண்டலத்தில் மகளிர் தின விழா
ஆலந்துார், மகளிர் தின விழாவை முன்னிட்டு, மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் பணிபுரியும் பெண்களுக்கு விருந்து வைத்து, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் மகளிர் தின விழா மண்டல தலைவர் சந்திரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மண்டலத்தில் பணிபுரியும் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. மேலும், புடவை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அளித்து கவுரவிக்கப்பட்டனர். மண்டல உதவிக் கமிஷனர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.