மேலும் செய்திகள்
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி
01-Oct-2025
சென்னை: தெற்காசிய மூத்தோர் தடகள போட்டியில், இந்தியா சார்பில், தமிழக வீரர் - வீராங்கனையர், 10 பேர் களமிறங்குகின்றனர். எஸ்.எப்.ஏ., எனும் தெற்காசிய தடகள கூட்டமைப்பு, 29 ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு சென்னையில், தெற்காசிய இளையோர் தடகள போட்டியை நடத்தியது. இதைத்தொடர்ந்து, நான்காவது தெற்காசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில், நாளை துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில், தெற்காசிய அளவில், இந்தியா உட்பட ஏராளமான நாடுகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில், இந்தியா சார்பில், 42 பெண்கள், 44 ஆண்கள் என, மொத்தம் 86 வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த 10 வீரர்கள் களமிறங்குகின்றனர். அதன் பட்டியலை நேற்று முன்தினம் தமிழ்நாடு தடகள சங்கம் வெளியிட்டது.
01-Oct-2025