உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரக்கோணம் ரேணிகுண்டா தடத்தில் 13 மேம்பாலங்கள்

அரக்கோணம் ரேணிகுண்டா தடத்தில் 13 மேம்பாலங்கள்

சென்னை:அரக்கோணம் - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில், தற்போதுள்ள 13 ரயில்வே 'கேட்'டுகளை நீக்கிவிட்டு, மேம்பாலங்களை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணியர் ரயில் பாதைகளை கடந்து செல்வதையும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் ரயில்வே துறை முயற்சி மேற்கொண்டு ள்ளது. இதற்காக, ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்களும், கேட்டுகளை நீக்கி விட்டு சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கிடையே, அரக்கோணம் - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில், தற்போதுள்ள 13 கேட்டுகளை நீக்கிவிட்டு, மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இறுதிகட்டத்தில் உள்ளது. பணிகளை துவக்கி, 10 மாதங்களில் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த பாலங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, விபத்துகள் குறைவதோடு, தடையின்றி போக்குவரத்தும் மேற் கொள்ள வழிவகுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ