கைப்பையில் வைத்திருந்த 14 சவரன் நகை மாயம்
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நேரு நகரை சேர்ந்தவர் நிரஞ்சனாதேவி, 68. அஸ்தினாபுரத்தில் வசிக்கும் சகோதரர் குடும்பத்தினருடன் சேர்ந்து, நேற்று முன்தினம், அசோக் நகரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்ல முடிவு செய்தார்.இதையடுத்து, குரோம்பேட்டை நேரு நகர், இந்திரா காட்டன் மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தடம் எண்: 66ஏ என்ற பேருந்தில் ஏறி, அஸ்தினாபுரம் சென்றார்.அங்கு இறங்கி, சகோதரரின் குடும்பத்தினரை அழைத்து வர, அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு, தான் வைத்திருந்த கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த, 14 சவரன் நகை மாயமானதை கண்டு, நிரஞ்சனா தேவி அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விசாரித்தும் பயனில்லை. இதையடுத்து, நகை மாயமானது குறித்து, சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.