மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறிய பங்களாதேஷி கைது
04-Apr-2025
வில்லிவாக்கம், சட்டவிரோதமாக வீட்டில், 166 கிலோ குட்கா புகையில் பொருட்களை வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லிவாக்கம், நேரு நகர், ஒன்றாவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக குட்கா வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததது.சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்த போது, குட்கா இருப்பது உறுதியானது. இதையடுத்து, வீட்டில் குட்கா பதுக்கு வைத்திருந்த, வில்லிவாக்கம் சிட்கோ நகரைசசேர்ந்த முகமது சாதிக், 26, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகமது பர்வேஸ் ஆலம், 34 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து, குட்காவை வாங்கி வந்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்றது தெரிந்துது. அவர்களிடமிருந்து, 166 கிலோ குட்கா புகை பொருட்கள், 34,430 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர.54 கிலோ குட்கா பொருள்நீலாங்கரையில் பறிமுதல்நீலாங்கரை, மே 4-சின்னநீலாங்கரை, சிங்காரவேலன் 8வது குறுக்கு தெருவில், ஒரு வீட்டில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக, நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம், அந்த வீட்டை சோதனை செய்தபோது, 54 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.இதை, மதுயிர் ரஹ்மான், 28, வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, சில்லறையாக விற்பனை செய்வது தெரிந்தது.இதையடுத்து, போலீசார் குட்காவை பறிமுதல் செய்து, மதுயிர் ரஹ்மானை கைது செய்து விசாரிக்கின்றனர்.
04-Apr-2025