மேலும் செய்திகள்
11 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
26-Sep-2024
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனைச்சாவடி அருகே, மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையிலான குழுவினர், சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வாழைப்பழம் ஏற்றி வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில், தலா 100 கிலோ எடையுள்ள, 10 கஞ்சா பார்சல்கள் இருந்தன. அதே வாகனத்தின் ரகசிய அறையில், மேலும் 10 பார்சல்கள் இருந்தன. மொத்தம், 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 20 லட்சம் ரூபாய்.கஞ்சா கடத்தி வந்த, ஆந்திராவைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜு என்ற மோகன்ராஜ், சண்முகநாதன் என்ற பிரபு, பாலமுருகன், செந்தில்நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 'போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, 10581 அல்லது 94984 10581 என்ற இலவச எண்களில் தகவல் அளிக்கலாம்; ரகசியம் பாதுகாக்கப்படும்' என, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
26-Sep-2024