உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 25 பேர் கைது

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 25 பேர் கைது

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம், சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான, டி - 20 போட்டி நடந்தது.இப்போட்டிக்கான டிக்கெட்டுகள், எப்போதும் போல ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.இருப்பினும், ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காதவர்கள், மைதானத்திற்கு அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளை, கூடுதல் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என, வருகின்றனர்.அவர்களை குறி வைத்து, சிலர் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்று, லாபம் பார்ப்பதுடன் மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இதுபோல், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவோரை பிடிப்பதற்காக, திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில், மைதானத்தை சுற்றி, 10க்கும் மேற்பட்ட குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டன.இக்குழுவினர், நேற்று முன்தினம், மைதானத்தை சுற்றியுள்ள பகுதியில், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த, 25 பேரை கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.தொடர்ந்து டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த, செங்குன்றத்தைச் சேர்ந்த நிர்மல், 24, உட்பட, 25 பேர், கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 48 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை