உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை ஊசி செலுத்திய 3 வாலிபர்கள் அட்மிட்

போதை ஊசி செலுத்திய 3 வாலிபர்கள் அட்மிட்

கொடுங்கையூர்:கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர்களான பிரசாத், 26, நிதிஷ்குமார், 22, கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்த ராஜேஷ், 20, உள்ளிட்ட ஐவர் கும்பல், கொடுங்கையூர் எழில் நகரிலுள்ள ரயில் தண்டவாளம் அருகே அமர்ந்து, நேற்று போதை ஊசி செலுத்திக் கொண்டனர்.பின், ஐவரும் வீட்டிற்குச் சென்ற நிலையில் பிரசாத், ராஜேஷ், நிதிஷ்குமார் ஆகிய மூவருக்கும் உடல் நடுக்கம் ஏற்பட்டு, வாந்தி எடுத்து மயக்கமடைந்து உள்ளனர்.அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை