உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தைகளை வைத்து ரயிலில் பிச்சை 3 வடமாநில பெண்கள் அதிரடி கைது

குழந்தைகளை வைத்து ரயிலில் பிச்சை 3 வடமாநில பெண்கள் அதிரடி கைது

பரங்கிமலை, மின்சார ரயில்களில், ஏழு குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த, வடமாநில பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஏழு குழந்தைகளும், மூன்று பெண்களும், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.தாம்பரம்- - கடற்கரை செல்லும் மின்சார ரயில்களில், குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்கள், பயணியருக்கு தொந்தரவு அளித்து வருவதாக, பரங்கிமலை ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.மாவட்ட குழந்தைகள் நல துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு தன்னர்வலர்கள் ஆகியோருடன் இணைந்து, பரங்கிமலை ரயில்வே இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீசார், ரயில்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, மீனம்பாக்கம், திரிசூலம் பகுதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த மூன்று பெண்கள் சிக்கினர்.அவர்களிடம் இருந்து, இரண்டு மாத கைக்குழந்தை உள்ளிட்ட ஏழு சிறார் - சிறுமியரை மீட்டனர். விசாரணையில், எங்களின் குழந்தைகள்தான் என, மூன்று பெண்களும் கூறினர். மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்தனர், பின், ஏழு குழந்தைகளுடன், மூன்று பெண்களையும், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை பருவ பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மாலிம் கூறுகையில், ''ரயில்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், நலக்குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, யாருடைய குழந்தைகள் என, விசாரிக்கப்படும்,'' என்றார்.'139' எண்ணில் அழைக்கலாம்!குழந்தைகளுடன் பிச்சை எடுப்பவர்களுக்கு, பயணியர் யாரும் காசு தரவேண்டாம். இதை ஊக்கப்படுத்துவதால், பிச்சை எடுப்பவர்கள் குற்றவாளிகளாக மாறுகின்றனர். இதனால், குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ரயில்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணியரிடம் பிச்சை எடுக்கும்போது, தகராறு செய்யும் திருநங்கையரையும் கைது செய்து வருகிறோம்.கல்லுாரி மாணவர்கள் ரயில்களில் தொங்கியபடி பயணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ரயில் புகார்கள் குறித்து, 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.- ரயில்வே போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை