மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
2 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
2 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
2 hour(s) ago
சென்னை: விரைவு ரயிலின் கழிப்பறையில் தவறி விழுந்த 4 சவரன் செயினை ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்டு உரிய பயணியிடம் ஒப்படைத்தனர். சென்னை சென்ட்ரல் – கோவை இடையே இயக்கப்படும் சேரன் விரைவு ரயில் நேற்று கோவையில் இருந்து சென்ட்ரல் வந்தது. ‘பி2’ பெட்டியில் பயணித்த பெண், தன் தங்க சங்கிலி கழிப்பறையில் தவறி விழுந்ததாக புகார் அளித்தார். இதையடுத்து ஊழியர்கள் அந்த பெட்டியின் பயோ கழிப்பறையை கழற்றி, நகையை மீட்டனர். பின், அதை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் உரிய பெண்ணிடம் வழங்கினர். நகை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த அவர், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago