உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருடிய நகையை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர் கைது

திருடிய நகையை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த 4 பேர் கைது

திருவேற்காடு;வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி, அதை அடகு வைத்து சொகுசாக வாழ்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திர ு வேற்காடு, பெருமாள் அகரத்தை சேர்ந்தவர் வித்யா, 45; போரூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி, அவர் வேலைக்கு சென்றார். மதியம், அவரது மகன் அரவிந்த் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 22 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து, திருவேற்காடு போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சி வாயிலாக மர்ம நபர்களை தேடி வந்தனர்.இதில், திருவேற்காடைச் சேர்ந்த விஜய், 26, பரத், 22 ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். வித்யா வீட்டில் திருடிய நகையில், 7 சவரனை நண்பர்கள் உதவியுடன் அடகு வைத்து, அந்த பணத்தில் உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்தது தெரிந்தது. நகையை அடகு வைக்க உதவிய, திருவேற்காடைச் சேர்ந்த அவரது நண்பர்கள் நிர்மல் குமார், 23, சிதம்பரத்தை சேர்ந்த காளிதாஸ், 36 ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய், பரத் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை