உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்திமுனையில் மாமூல் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது

கத்திமுனையில் மாமூல் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது

வடக்கு கடற்கரை, வடக்கு கடற்கரையில், மொபைல் போன் கடை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்சத் உசேன், 30. இவர், சென்னையில் தங்கி மொபைல்போன் கடையில் பணிபுரிகிறார். கடந்த 9ம் தேதி, மொபைல் போன் விற்பனை பணத்தை, அர்சத் உசேன் தன் நண்பர் அப்துல்ரசாக்குடன் சேர்ந்து எடுத்து வந்தார். வடக்கு கடற்கரை, 2வது கடற்கரை சாலை, டீக்கடை அருகே வந்தபோது, அங்கு இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் கும்பல், அர்சத் உசேன் பைக்கை இடித்து கீழே தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி பணப்பையை பறிக்க முயன்றனர். இருவரும் கத்தவே, பொதுமக்கள் ஒன்று கூடியதும், பணம் பறிக்க முயன்ற நபர்கள் தப்பி சென்றனர். இது குறித்து அர்சத் உசேன் வடக்குகடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ், 22, திருவள்ளூரைச் சேர்ந்த சரவணன், 35, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜஸ்டின், 24, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அகஸ்டின், 21 ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை