உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநீர்மலையில் கஞ்சா விற்பனை 4 பேர் சிக்கினர்

திருநீர்மலையில் கஞ்சா விற்பனை 4 பேர் சிக்கினர்

பம்மல், பம்மல் அடுத்த திருநீர்மலையில், தனிப்படை போலீசார் நேற்று, ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருமங்கையாழ்வார்புரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். மணிமங்கலத்தைச் சேர்ந்த பாலாஜி, 22, என்பதும், இடுப்பில், 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.மேலும், திருநீர்மலையை சேர்ந்த சேசுராஜ், 38, என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சேசுராஜை கைது செய்த போலீசார், அவரது வீட்டு மாடியில், தண்ணீர் தொட்டிக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.சேசுராஜ்க்கு கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்த மணலி கலைவாணி, 30, வெள்ளை சந்தோஷ், 27, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விசாகப்பட்டினத்தில் சிங் என்பவரிடம் இருந்து, ஒரு பார்சல், 10,000 ரூபாய் என, 20 கிலோ கஞ்சா வாங்கி வந்து, மணிமங்கலம், திருநீர்மலை, தாம்பரம், பள்ளிக்கரணை, மதுரவாயல், பெரும்பாக்கம், ஓ.எம்.ஆர்., ஆகிய பகுதிகளில், சிறிய பொட்டலமாக மாற்றி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 10 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை