கர்ப்ப காலத்திற்கு பிந்தைய சர்க்கரை நோயால் 55% பாதிப்பு
சென்னை, சென்னை காவேரி மருத்துவமனை சார்பில், நடமாடும் பரிசோதனை ஆய்வகம் சார்பில், 3,971 பேரிடம் நீரிழிவிற்கான பரிசோதனை செய்யப்பட்டது.ஆய்வு முடிவு குறித்து, மருத்துவமனையின் நீரிழிவு நோய் நிபுணர் பரணீதரன் கூறியதாவது:இந்த ஆய்வு, ஆரம்ப நிலையிலேயே சர்க்கரை நோயை கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.இதில், சர்க்கரை நோய்க்கான முந்தைய வரலாறு இல்லாத, 21 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.மேலும், கர்ப்ப கால நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோரில் 55.1 சதவீதம் பேருக்கு, பிரசவத்திற்கு பிந்தைய நீரிழவு நோய் உருவாகி இருந்தது.நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோரில் 67.6 சதவீதம் பேர் உடல் பருமன் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளர்.இது போன்ற சர்க்கரை நோய் அறிகுறி இல்லாதவர்கள், 88.5 சதவீதம் பேர், மாவு சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்கின்றனர்.எனவே, பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் மற்றும் தொற்றா நோய் பாதிப்புகளை கண்டறிய, குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.