மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவர் கைது
12-May-2025
புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்த கருப்பா என்கிற ஆபாவாணன், 26, என்பவர், நண்பர் ஜோதி ரஞ்சன், 23, உள்ளிட்டோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் மாலை புளியந்தோப்பு ஆடு தொட்டி உள்புறம் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.அப்போது நண்பர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த ஜோதி ரஞ்சன், கத்தியால் ஆபாவாணன் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆபாவாணனுக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரித்து, ஜோதிரஞ்சன், 23, ராகுல், 23, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், நான்கு பேரை நேற்று கைது செய்தனர். ஜோதிரஞ்சன் மற்றும் ராகுல் ஆகியோர், விசாரணையின்போது தப்பியோட முயன்று வழுக்கி விழுந்ததில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
12-May-2025