உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரட்டை கொலை வழக்கு மேலும் 6 பேர் சிக்கனர்

இரட்டை கொலை வழக்கு மேலும் 6 பேர் சிக்கனர்

சென்னை, கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண், 25; ரவுடி. இவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த ரவுடி சுரேஷுடன் சேர்ந்து, கடந்த 16ம் தேதி கோட்டூர்புரத்தில் மது அருந்தி உள்ளனர்.இரவு 9:30 மணியளவில், போதையில் கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நாகவல்லி கோவில் அருகே, மூவரும் உறங்கினர். அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு பேர் கும்பல், அரிவாளால் அருண், சுரேஷை கொடூரமாக வெட்டி தப்பியது.இதில் சம்பவ இடத்தில் சுரேஷும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அருணும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார், முக்கிய குற்றவாளியான சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்த 'சுக்குகாபி' சுரேஷ், 26, இரண்டு சிறுவர்கள் உட்பட, ஏழு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஏழு கத்தி, மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று வழக்கில் தொடர்புடைய ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 20, தருண்குமார், 18, சாம் ஜெபஸ்டின், 19, மற்றும் செங்கல்பட்டு - ராஜ்கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ