உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜாமின் எடுக்காத வக்கீலை மிரட்டிய 6 பேர் கைது

ஜாமின் எடுக்காத வக்கீலை மிரட்டிய 6 பேர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி, தேபர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 35; ஐகோர்ட் வழக்கறிஞர். 1.50 கோடி ரூபாய் வழிப்பறி வழக்கில் மயிலாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட உலகநாதன், 33, அசோக்குமார், 32, உட்பட ஐந்து பேரை, ஜாமினில் எடுப்பதற்காக வழக்கறிஞர் கண்ணனிடம், 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.வழக்கிற்கு சம்பந்தப்பட்ட பணம் எனக்கூறி, போலீசார் அந்த பணத்தை கைப்பற்றியுள்ளனர்.இந்த நிலையில், ஐந்து பேரும் கடந்த மாதம் ஜாமினில் வெளியில் வந்தனர். கொடுத்த பணம் ௫ லட்சம் ரூபாயை கேட்டு நேற்று கண்ணன் வீட்டிற்கு கத்தியுடன் சென்ற 10 பேர் கும்பல், வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த 17 வயது சிறுவனை கத்தியால் வெட்டி தப்பியது.எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து உலகநாதன், 33, வினோத், 27, விக்ரம், 24, சரவணன், 32, விக்னேஷ்வரன், 26, கார்த்திக், 27, ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை