உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் கடத்திய 64 கிலோ கஞ்சா சிக்கியது

ரயிலில் கடத்திய 64 கிலோ கஞ்சா சிக்கியது

அம்பத்துர்: அம்பத்துார் ரயில் நிலையம் அருகே, அம்பத்துார் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சூட்கேசுடன் நின்றிருந்த வாலிபரின் நடவடிக்கை சந்தேகம் வரவே, சூட்கேசை சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரைச் சேர்ந்த எபினேசர் ஆந்தோணி, 23, என்பது, ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையம் வந்ததும் தெரிய வந்தது.அங்கிருந்து மின்சார ரயில் ஏறி, அம்பத்துார் ரயில் நிலையம் வந்தவர், தொழிற்பேட்டை பகுதியில் பணிபுரியும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும், பெரம்பூர் ரயில் நிலையத்தின், 2வது நடைமேடை அருகே கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை சோதனையிட்டனர்.அதில், 34 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 2 லட்ச ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ