உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோட்டூர்புரம் இரட்டை கொலையில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

கோட்டூர்புரம் இரட்டை கொலையில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

சென்னை, கோட்டூர்புரத்தில், இரண்டு ரவுடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறுவர்கள் உட்பட, ஏழு பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை, கோட்டூர்புரம் சித்ரா நகர், 'யு பிளாக்' குடியிருப்பில் வசித்தவர் அருண், 25; ரவுடி. அவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும், 16ம் தேதி கோட்டூர்புரத்தில், படப்பையைச் சேர்ந்த ரவுடி சுரேஷுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில், இரவு, 9:30 மணியளவில், கோட்டூர்புரம் சித்ரா நகர் நாகவல்லி கோவில் அருகே மூவரும் உறங்கினர்.அப்போது, மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு பேர், அரிவாளால் அருண், சுரேஷை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த சுரேஷ், 26, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மனோஜ், 21, அசோக்பில்லரைச் சேர்ந்த செல்வ கணபதி, 19, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகம், 20, சோழவரத்தைச் சேர்ந்த ஜீவன், 19, கோட்டூர்புரம் - அம்பத்துாரைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் இருவர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். முன்விரோதம், தொழில்போட்டி காரணமாக கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.இவர்களிடம் இருந்து, 7 கத்தி, 2 மொபைல்போன், 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ