உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடியை துரத்தி வந்து வெட்டிய 7 பேருக்கு வலை

ரவுடியை துரத்தி வந்து வெட்டிய 7 பேருக்கு வலை

எம்.ஜி.ஆர்.நகர்:கோவூர், நாயக்கமார் தெருவைச் சேர்ந்தவர் பிரதாப் குமார், 29; ரவுடியாக வலம் வந்த இவர் மீது, 14 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள நண்பர்களை பார்க்க, நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.பின், அண்ணா பிரதான சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில், மது போதையில் உணவு அருந்தியுள்ளார். அப்போது, அங்கிருந்த கும்பலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதாப் குமார் எம்.ஜி.ஆர்.நகரில் கே.கே., சாலை - குறுஞ்சி தெரு சந்திப்பில் நடந்து சென்றார்.அப்போது, அவரை துரத்தி வந்த ஏழு பேர் கும்பல், கத்தியால் வெட்டி தப்பியது. இதில், பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரிக்கும் எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ