உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 ஏக்கரில் கழிவுநீர் தேக்கம்: மாங்காடில் நோய் பரவும் அபாயம்

8 ஏக்கரில் கழிவுநீர் தேக்கம்: மாங்காடில் நோய் பரவும் அபாயம்

குன்றத்துார், சென்னை, குன்றத்துார் அருகே மாங்காடு நகராட்சி உள்ளது. இங்கு, 70,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை. இதனால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீருடன் சேர்ந்து, மகாலட்சுமி நகரில், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையோரம் உள்ள, 8 ஏக்கர் காலி நிலத்தில் தேங்கி, ஏரி போல் காட்சியளிக்கிறது. இந்த கழிவுநீர் வடிந்து செல்ல வழி இல்லாததால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி, பகல் நேரத்திலேயே கொசுகடியால், மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.கழிவுநீரால் அப்பகுதியில் நோய் பரவும் ஆபத்து உள்ளது. கழிவு நீரை வெளியேற்ற, மாங்காடு நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ