உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன்பிடி தடை காலத்தில் மீன் உணவு திருவிழாவா?

மீன்பிடி தடை காலத்தில் மீன் உணவு திருவிழாவா?

சென்னை, 'மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளபோது, மீன்வள திருவிழா நடத்துவது முறையல்ல' என, மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தமிழக மீன்வளத்துறை சார்பில், மூன்று நாள் மீன்வள திருவிழா, சென்னை தீவுத்திடலில் நடந்து வருகிறது. இந்த திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் பாரதி கூறியதாவது:மீன்பிடி தடை காலத்தில் நடத்தப்படும், இந்த உணவு திருவிழா, மீனவர்களுக்காக நடத்தப்படுகிறதா அல்லது மீன் வளர்ப்போருக்காக நடத்தப்படுகிறதா என்று தெரியவில்லை.ஏனெனில், மீன்வள அதிகாரிகள், மீனவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை; விழாவில், மீனவர்கள் பங்கேற்கவில்லை.மீன்பிடி தடை காலத்தில், நாட்டு படகுகள் மட்டுமே கடலுக்கு செல்வதால், அனைத்து வகையான மீனும் கிடைக்காது. அப்படியிருக்கும்போது, அனைத்து வகை மீனும் பயன்படுத்த வாய்ப்பில்லை. பயன்படுத்தி இருந்தால், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தெரியவில்லை.இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும்போது மீனவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மீனவர்களை ஒருங்கிணைக்காமல் மீன்வள திருவிழா நடத்துவது சரியான நடைமுறை அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ