உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதி பாதியாக நிற்கும் மழைநீர் கால்வாய் செம்பாக்கத்தில் சாலையில் ஓடும் கழிவுநீர்

பாதி பாதியாக நிற்கும் மழைநீர் கால்வாய் செம்பாக்கத்தில் சாலையில் ஓடும் கழிவுநீர்

செம்பாக்கம், தாம்பரம்- வேளச்சேரி சாலை, செம்பாக்கத்தில், மழைநீர் கால்வாய் தொடர்ச்சியாக இல்லாததால் நீண்ட நாட்களாக சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. தாம்பரம் - வேளச்சேரியில், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ச்சியாக கட்டாமல் பாதி பாதியாக நிற்கிறது.காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, சில மீட்டர் துாரத்திற்கு கால்வாய் கட்டப்படவில்லை.இதனால், மற்ற இடங்களில் இருந்து கால்வாய் வழியாக வரும் கழிவுநீர், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வெளியேறி, சாலையில் ஆறாக ஓடுகிறது. பல மாதங்களாக பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரிலேயே, அப்பகுதியினர் நடந்து செல்கின்றனர். வாகனங்களும் அதிலேயே சென்று வருகின்றன.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவி வருகிறது. கடைக்காரர்களும் பாதிப்படைகின்றனர். தொடர்ந்து சாலையில் கழீவுநீர் ஓடியும், அதை தடுக்க, விடுபட்ட இடத்தில் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, இவ்விஷயத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, விடுபட்ட இடத்தில் உடனடியாக கால்வாய் கட்டி, சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி