உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேரிச்சம் பழம் பால்கோவா அறிமுகம் செய்தது ஆவின்

பேரிச்சம் பழம் பால்கோவா அறிமுகம் செய்தது ஆவின்

சென்னை:ஆவின் சார்பில், சென்னையில் உள்ள ஆவின் பார்லர்களில், 'பேரிச்சம் பழம் பால்கோவா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை, 100 கிராம், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: சுத்தமான பசும்பாலை 50 சதவீதம் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, அதனுடன் அரைத்த பேரிச்சம்பழம், நெய் மற்றும் 'நட்ஸ்' சேர்த்து, பேரிச்சம்பழ பால்கோவா தயாரிக்கப்படுகிறது. இபதப்படுத்தும் ரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படாததால், தயாரித்த நாளில் இருந்து 8 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோரின் வசதிக்காக 100 கிராம் 60 ரூபாய்க்கும்; 250 கிராம் 140 ரூபாய்; 500 கிராம் 270 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். பேரிச்சம் கொட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லம் வளாகத்தில் உள்ள பாலகத்தில், 'பேரிச்சம் பழ பால்கோவவை' ருசித்த நுகர்வோர் ஒருவர் கூறியதாவது: ஆவினில் ஏற்கனவே வழக்கமான பால்கோவா விற்பனையில் உள்ளது. புதுவரவான 'பேரிச்சம் பழம் பால்கோவா' சுவை நிறைந்ததாக உள்ளது. ஆனால், அதில் ஒரு பேரிச்சம் பழ கொட்டை இருந்தது. இனிப்பு பால்கோவாவை விட, 10 ரூபாய் விலை அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sugir Raj
ஜூன் 09, 2026 05:51

பழைய கஞ்சி பதிய பானையில்


Sugir Raj
ஜூன் 09, 2026 05:50

பேரீச்சம்பழம் பால் கோவா ஆவினில் பல வருடங்களாக அதாவது 1986 இருக்கிறது.ஆவின் அதிகாரிகள் மீண்டும் ஒரு தவறான செய்தியை அரசுக்கு கொடுத்து இந்த அரசையையும் அவமானப்பட வைக்கிறார்கள். ஆவின் அதிகாரிகள் தங்களுடைய தவறுகளை மறைக்க செய்யும் வேலை இது.இந்த அரசானது ஆவின் அதிகாரிகளின் மாய வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.இந்த செய்தியை பகிர்ந்து அதிகாரி ஆவினுக்கு புதியது போல