மேலும் செய்திகள்
நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை
03-Jul-2025
மடிப்பாக்கம், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், கஞ்சா வழக்கில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரை சேர்ந்த மோகன், 24, என்பவர் கைது செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீதிமன்ற பிடியாணையில் வெளியில் வந்த இவர், போதை பொருட்கள் மற்றும் மனோவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த மாதம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, தீவிர தேடுதலில் ஈடுபட்ட மடிப்பாக்கம் போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
03-Jul-2025