உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

மயிலாப்பூர் பகுதியில், 2020, ஏப்., 21ல் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இவ்வழக்கில் 17 வயது சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட எட்டு பேர் கைதாகினர். உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஜாமினில் வெளியே வந்த தினேஷ், 23, என்பபவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். செப்., 29ல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, மயிலாப்பூர் பகுதிக்கு நேற்று வந்த தினேஷை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை