உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் தொகுதியில் அ.தி.மு.க., உற்சாகம் 

முதல்வர் தொகுதியில் அ.தி.மு.க., உற்சாகம் 

கொளத்துார், ''நாற்பது ஆண்டுகள் தி.மு.க., உழைத்தும் அவர்கள் மதிக்கவில்லை. அ.தி.மு.க.,வில் நான்கு ஆண்டுகள் உழைத்தேன்; என்னை புரிந்து கொண்டனர்,'' என, மாவட்ட செயலர் வி.எஸ்.பாபு பேசினார்.வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று கொளத்துாரில் நடந்தது. சமீபத்தில், மாவட்ட செயலராக பொறுப்பேற்ற வி.எஸ்.பாபு தலைமை வகித்தார்.கூட்டத்தில் அவருக்கு, தொண்டர்கள் வீரவாள் பரிசளித்தனர். அதை மேடையில் அவர் சுழற்றி காட்டினார். பின், வி.எஸ்.பாபு பேசியதாவது: நான் எப்படி வேலை செய்வேன் என்பது, தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும் தெரியும். நான் 40 ஆண்டு காலம் தி.மு.க.,வுக்காக உழைத்தேன். அவர்கள் என்னை மதிக்கவில்லை.நான்காண்டு காலம் அ.தி.மு.க.,விற்கு உழைத்தேன். அவர்கள் என்னை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.ஆறு மாத காலத்தில் பழனிசாமி ஆட்சி வந்தவுடன், தி.மு.க.,வில் பலர் உள்ளே போய்விடுவர். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை துணை செயலர் எஸ்.டி.எஸ். செல்வம், மாநில இணைச் செயலர் கொளத்துார் கணேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை