ஏ.ஜே.எஸ்., பள்ளி மாணவி பேட்மின்டனில் அசத்தல்
சென்னை: பள்ளிகளுக்கான பேட்மின்டன் போட்டியில், 19 வயது பிரிவில் ஆலந்துார் ஏ.ஜே.எஸ்., நிதி பள்ளியின் மாணவி முதலிடம் பெற்று அசத்தினார். பள்ளிக்கல்வித்துறையின், வருவாய் மாவட்ட பேட்மின்டன் போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கம், நேரு பார்க்கில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மாணவியருக்கான 19 வயது பிரிவில், ஆலந்துார் ஏ.ஜே.எஸ்., நிதி பள்ளியின் சித்ரா, அம்பத்துார் எபினேசர் பள்ளி மாணவி மெர்லின் ஜோஷை தோற்கடித்து முதலிடத்தை கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில், அம்பத்துார் எபினேசர் பள்ளி, திரு.வி.க.,நகர் அரசு பள்ளிகள் முறையே, முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின. அதேபோல், 19 வயது தனி நபர் பிரிவில், அரும்பாக்கம் செயின்ட் வின்சென்ட் பள்ளி முதலிடமும், ஆலந்துார் லிட்டில் பிளவர் பள்ளி இரண்டாமிடத்தையும் வென்றனர். இரட்டையரில் ஹோலி ஏஞ்சல் பள்ளி முதலிடமும், ஆர்.பி.சி., பள்ளி இரண்டாமிடத்தையும் வென்றன. அதேபோல், 14 வயதில், புரசைவாக்கம் சத்யா மெட்ரிக் பள்ளியின் யாஷிகா முதலிடத்தையும், விருகம்பாக்கம் தாய் சத்யா பள்ளியின் சாதனா இரண்டாமிடத்தையும் வென்றனர்.