உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிரம்பி வழிந்த கால்வாய்

நிரம்பி வழிந்த கால்வாய்

நிரம்பி வழிந்த கால்வாய்அரும்பாக்கத்தில் வெள்ள நீர் நிரம்பி வழியும் விருகம்பாக்கம் கால்வாயில் நீரை அகற்ற, துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தார். கனமழையால், அரும்பாக்கம் வழியாக செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. இக்கால்வாயை, நேற்று மதியம் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கால்வாயில் வெள்ள நீர் வெளியேறும் வழி குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.வெள்ள நீரை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதேபோல், மழைநீர் தேங்கிய அரும்பாக்கம், சூளைமேடு பெரியார் பாதை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை