உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெரிசலை தவிர்க்க கருத்து கேட்பு

நெரிசலை தவிர்க்க கருத்து கேட்பு

சென்னை,சென்னை பெருநகரின் எல்லையை, 5,904 சதுர கி.மீ., விரிவாக்கம் செய்ய, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த எல்லையை அடிப்படையாக வைத்து, புதிய போக்குவரத்து செயல்திட்ட தயாரிப்பு பணிகளை, கும்டா துவக்கி உள்ளது.இதன்படி, மாநகர் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க, அதில் முக்கிய பங்கேற்பாளர்களாக உள்ள பேருந்து, லாரி, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை, சென்னையில் கும்டா நேற்று நடத்தியது.பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள், அதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து, ஓட்டுனர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும், மேலும் பல பிரிவினரிடம் கருத்து கேட்க உள்ளதாகவும், கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ