உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஸ்வத்தாமனுக்கு மேலும் 15 நாள் இடைக்கால ஜாமின்

அஸ்வத்தாமனுக்கு மேலும் 15 நாள் இடைக்கால ஜாமின்

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, மறைந்த ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு, வரும் 28ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் உட்பட 27 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, இறுதிச்சடங்கில் பங்கேற்க, அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமின், நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. அதனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் சரண் அடைந்த அஸ்வத்தாமன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், காரியம் உள்ளிட்டவற்றில் பங்கேற்க, மேலும் 15 நாட்கள் ஜாமின் வழங்கக்கோரி, அஸ்வத்தாமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 28ம் தேதி வரை, அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் சதீஷ், சிவா மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !