மேலும் செய்திகள்
பைக் மீது லாரி மோதி விபத்து
24-Mar-2026
ஓட்டேரி:தி.மு.க., நிர்வாகியை, மது போதையில் தாக்கிய ஐவரை, போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார், 24. தி.மு.க.,வில், எழும்பூர் தொகுதி பாக முகவராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி குன்னுார் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு முன்னால், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி சென்று கொண்டிருந்த சிலர், யஷ்வந்த் குமார் இருசக்கர வாகனத்தை இடிப்பது போல சென்றனர். அவர்களை தட்டிக்கேட்டதால், மது போதையில் இருந்த அவர்கள், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, யஷ்வந்த் குமாரை சரமாரியாக தாக்கினர். காயடைந்த யஷ்வந்த் குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்த ஓட்டேரி போலீசார், நேற்று வில்லிவாக்கம், நேரு நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், 26, ஆனந்த், 37, தனுஷ், 23, சுரேந்திரன், 19, பரந்தாமன், 27, ஆகிய ஐவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
24-Mar-2026