உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊட்டச்சத்து மாதம் அரும்பாக்கத்தில் விழிப்புணர்வு

ஊட்டச்சத்து மாதம் அரும்பாக்கத்தில் விழிப்புணர்வு

அரும்பாக்கம், சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாவட்ட அளவிலான தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது.நிகழ்வில், 'ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசமாகும்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே துவக்கி வைத்தார்.தொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்து வினாடி - வினா போட்டி மற்றும் சுவரொட்டிகள் தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கிய கலெக்டர், ஊட்டச்சத்து குறித்து மாணவியருடன் கலந்துரையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !