16 மேம்பாலங்களில் அழகுபடுத்தும் பணி
சென்னை: சென்னையில் 16 மேம்பாலங்களில் அழகுபடுத்தும் பணி நடைபெறுகிறது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையில், 16 மேம்பாலங்களை மேம்படுத்தி, அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 10 மேம்பாலங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. அதன்படி, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு மேம்பாலம், பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை – கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு, டி.டி.கே. சாலை – சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், செனாடப் சாலை – டர்ன்புல்ஸ் சாலை, ஜி.கே.மூப்பனார் பாலம், ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் என, ஆறு மேம்பாலங்கள், 13.43 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.