நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் 35 மாடி குடியிருப்பு கட்டுது பாஷ்யம்
சென்னை,சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில், பாஷ்யம் நிறுவனம், 35 மாடிகளுடன் குடியிருப்பு வளாகத்தை கட்ட உள்ளது. சென்னையில், எஸ்.பி.ஆர்., பிரிகேட், பாஷ்யம், காராகிராண்ட் போன்ற நிறுவனங்கள், அதிக உயரமான கட்டடங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக, குடியிருப்பு திட்டங்களை இந்நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன. இந்த வகையில், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி அலுவலகம் செயல்பட்டு வந்த, 5.78 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது. இந்த நிலைத்தை பாஷ்யம் குழுமம், கடந்த ஆண்டு வாங்கியது. அந்த நிலத்தில், 35 தளங்களுடன், 3 டவர்களுடன் உயர் ஆடம்பர வசதிகளுடன் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூர்வாங்க பணிகளை, பாஷ்யம் நிறுவனம் துவக்கி உள்ளது. சென்னை நகரின் மையப்பகுதியில், அண்ணா சாலை 'பிரிகேட் ஐகான்' எனப்படும், 38 மாடி குடியிருப்புக்கு அடுத்த உயரடுக்கு திட்டமாக, பாஷ்யம் நிறுவன ஹாடோஸ் சாலை திட்டம் அமைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் கூறினர். ***