சிறுமியிடம் அத்துமீறல் பீஹார் வாலிபருக்கு கைது
அம்பத்துார்செங்குன்றம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, ஒன்பது வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் பீஹாரைச் சேர்ந்த ராஜ் குமார் தோத்ரி, 22, என்கிற இளைஞர், நேற்று முன்தினம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.பணி முடிந்து வீடு திரும்பிய பெற்றோரிடம், சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், அம்பத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.விசாரித்த மகளிர் போலீசார் ராஜ்குமார் தோத்ரியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.