மேலும் செய்திகள்
மகளை பள்ளியில் விட்டு திரும்பியவர் வேன் மோதி பலி
11-Sep-2024
திருப்போரூர், பல்லாவாரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் எட்வின், 24. இவர், நேற்று மதியம், பஜாஜ் பல்சர் பைக்கில், கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.திருப்போரூர் பெட்ரோல் பங்க் அருகே, அதே திசையில் சைக்கிளில் சென்றவர் வலதுபுறம் திரும்ப முயற்சி செய்துள்ளார்.அப்போது, எட்வின் சென்ற பைக், சைக்கிள் மீது மோதி, அதே நேரத்தில் வந்த ஸ்பிளண்டர் பைக்கிலும் மோதி கீழே விழுந்தார். இதில், எட்வின் பலத்த காயமடைந்தார். மற்ற இருவரும் சிறிய காயங்களுடன் தப்பினர். அப்போது, அந்த வழியாக வந்த திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எட்வினை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Sep-2024