உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் திருடியவர் சிக்கினார்

பைக் திருடியவர் சிக்கினார்

கிண்டி:கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 25. இவர், இரு தினங்களுக்கு முன், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனம் திருடு போனது.இதுகுறித்த புகாரின்படி, கிண்டி போலீசார் விசாரித்தனர். அதில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி, 36, என்பவர், இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது.போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி