மரக்கிளை முறிந்து விழுந்து பைக்கில் சென்றவர் காயம்
சென்னை, ராயப்பேட்டை, சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 39; புகைப்படக் கலைஞர். இவர், நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில், மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லுாரி வழியாக சென்றார். அப்போது சாலையோரத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து, அவர் மீது விழுந்தது.இதில் காயமடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.