மேலும் செய்திகள்
மேலாளர், நேரக்காப்பாளர் ஒருவரை ஒருவர் தாக்குதல்
25-Jun-2025
திருப்போரூர், வண்டலுார் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினராக இருந்த அன்பரசு, 28, திருப்போரூர் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் 2023ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டரன்.இதில், ஜாமினில் வெளியே வந்த ஒத்திவாக்கத்தைச் சேர்ந்த சுனில், மீண்டும் குற்ற செயலில் ஈடுபடுவதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அவர் தங்கிய இடங்களில் சோதனை செய்ததில், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் நேற்று, அவரை கைது செய்தனர்.விசாரணையில், அன்பரசுவின் கூட்டாளிகள் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், தப்பிக்க நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகவும் கூறியுள்ளார். ஒரு நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
25-Jun-2025