மேலும் செய்திகள்
கடைகளில் மாமூல் வசூல் 'ஹிட் -லிட்ஸ்' ரவுடி கைது
21-Mar-2025
ஆதம்பாக்கம், சேத்துப்பட்டு, எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் பார்த்தீபன், 24. இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, திருமலை தெருவில், வாடகை வீட்டில் வசிக்கிறார்.இவரது வீட்டில், சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்காக, நாட்டு வெடிகுண்டு, கத்தி பதுக்கி வைத்திருப்பதாக, தெற்கு குற்றப்பிரிவு தனிப்படைக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து, ஆதம்பாக்கம் விரைந்த தனிப்படை போலீசார், உதவிக் கமிஷனர் முத்துராஜ் தலைமையில், மோப்ப நாய் உதவியுடன் பார்த்தீபன் வீட்டில் தீவிர சோதனை நடத்தி, பெரிய கத்தியை பறிமுதல் செய்தனர்.மோப்ப நாய் வீட்டின் பின்புறம் சென்று, ஒரு இடத்தில் நின்று குரைத்தது. அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தபோது, அங்கு நாட்டு வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மணல் நிரப்பிய வாளியில் வெடி குண்டை பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.பார்த்தீபனை பிடித்து விசாரித்ததில், அவரின் நண்பரான வினித் என்பவர், வெடிகுண்டுகளை கொடுத்து வைத்ததும், அவர் தனது சகோதரர் தனுஷை கொண்றவர்களை பழி தீர்க்க, அவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது.மேலும், அந்த நாட்டு வெடிகுண்டு, துாக்கி எறிந்தால் வெடிக்கும் வகையிலான கையெறி குண்டு என்பதும் தெரிந்தது. இதையடுத்து, பார்த்தீபனை போலீசார் கைது செய்தனர்.அவர் அளித்த தகவலின்படி, வினித்தை பிடிக்க, சோழபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்.
21-Mar-2025