உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கீழ்ப்பாக்கம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு வெடிண்டு மிரட்டல்

கீழ்ப்பாக்கம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு வெடிண்டு மிரட்டல்

கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கம் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கு, 'இ- மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கீழ்ப்பாக்கம், மில்லர்ஸ் சாலையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் செயல்படுகிறது. அலுவலகத்தில் நேற்று காலை ஊழியர்கள், நிர்வாகத்திற்கு வந்த இ - மெயிலை பார்வையிட்டனர். அதில், பி.எஸ்.என்.எல்., அலுவலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மெயில் ஒன்று வந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். கீழ்ப்பாக்கம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து அலுவலகம் முழுதும் சோதித்ததில் 'புரளி' என்பது உறுதியானது. 'இ- மெயில்' முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை